Friday, July 13, 2018


ஜெயமுழக்கம் வாழ்த்துதுமே!

பெங்களூரு சென்னை ஈரோடு கோவை 
பரிசில்தாம்  நல்கிடும் தமிழறிஞர்க்  கூடிவாழ்த்த
நுண்மான் வாகையர் மூவருஞ் சூடிஇன்பத் 
தேன்தமிழ்ப்  புலத்தே இலங்க வாழ்த்துதுமே!

கொங்கு மண்ணிற் சிறந்தோர் வாழ்த்து  
கொஞ்சுந் தமிழறக்  குலத்தோர் வாழ்த்து  
கோவை வசந்தக்  கவிவாசல் வாழ்த்து  
கோவை கோகுலன் திருநர் வாழ்த்துதுமே!

நூற்றாம் நாவல் படைப்பு வாழ்த்து 
நம்முகில் தினகரன் நாவல்கள் வாழ்த்து 
ராஜேஷ் குமாரின்  ரசிகரவர்  வாழ்த்து 
நாவிசை.. ஜெயஜெய ஓசையால்  வாழ்த்துதுமே!

தண்டமிழ்த் தமிழறிஞர் வெற்றிக்கு வாழ்த்து 
தமிழோசை ராமலிங்க அண்ணலார் வாழ்த்து 
அன்பவர் தன்மானம் ஆய்வுக்கு வாழ்த்து 
இம்மூவர் நட்பேறு நல்வாழ்த்து வாழ்த்துதுமே!!
                              -கவிதாயினி அகிலமணி ஸ்ரீவித்யா,
                                         கோவை,  08.05.2018.

No comments:

Post a Comment