Wednesday, March 9, 2022

"உடனிருந்த உத்தமத்தம்பி லட்சுமணன்"
வசந்த வாசல் - பன்னாட்டுக் கவியரங்கம்
(கம்பன் காட்டிய காப்பிய மாந்தர்கள்)
இணைய வழி - 26.12.2021, ஞாயிறு, மாலை 4.30 மணிக்கு
அமெரிக்கா - நேரம்: காலை 6.00 மணிக்கு

                  (1)
இராம அவதாரக் காப்பியத் தேரில்
இராமன் தம்பி இலக்குவன் இலக்குவன்
இராமனின் அடிபணிந்துத் தான்சேவை ஆற்றிட
இராம இலக்குவன் சகோதர மகிமையே!

                (2)
இராமன் நிழலாய் தம்பி இலக்குவன்
இராமன் காட்டிற்குச் சென்றபோதும் நீங்காமல்
ராமன் கைத்தலம் பற்றியபோதும் நீங்காமல்
ராமன் சீதாராமன் என்றுதன் பிறவிவாழ்ந்தே!

                  (3)
தந்தை தசரதர் தாயவள் சுமித்ரா
தன்னுடன் பிறந்தோர் பரதன்  சத்ருகனன்
தன்னுயிர்  மனையாள் ஊர்மிளா  நல்லுணவு
தன்சுகம் நித்திரை துறந்தான் இலக்குவனே!

                    (4)
அரக்கர் குலத்தை அழித்த இராமனின்
பரம்வீர வெற்றிக்கு காவலனாய் லங்கா
அரக்கிச் சூர்ப்பனகை மூக்கரிந்து இந்த்ரஜித்
சிரத்தை வீழ்த்தி இதிகாசம் தான்பதிந்தாரே!

                         (5)
இக்கோடு தாண்டாதே ஆபத்து நேருமென
அக்கறைக்  கொண்டன்றுச்  சீதைக்கு எல்லைச்சுட்டி
எக்கரைக் கடக்கவும் அண்ணனுக்கு நற்துணையாகி
தக்கநேரம்  மாயமான் அஃதென்றுக் காத்தாரே!


                      (6)
முடிவில் மறுவுயிர்ப்  பெற்ற இலக்குவன்
முடிசூடும் ராமனின் பட்டாபிஷேகம் வாழ்த்தி
முடிந்த இன்பமாய் கவரிவீசக் காப்பிய
முடிப்புகழ் உடனிருந்த உத்தமத் தம்பியடைந்தே!
    - சித்திரக் கவிஞர் அகிலமணி ஶ்ரீவித்யா, கோவை, 25.12.2021.

 இணைய வர்த்தகச் சந்தை!

வசந்த வாசல் கவிமன்றம், தொகுப்பு மலர் சார்பு.
                   
                    (1)
சின்னச் சின்னப் பொருட்கள் வாங்க
சந்துப் பொந்துக் கடைகள்
தேடித்தேடி சுற்றுதல் வேண்டாம்
தேவைக்கு மின்கணினி கட்டளை
வரவேற்று வர்த்தகம் செய்வோர்
வேண்டியப் பொருளை
வேண்டும் நபர்கள் இருக்கும்
இடமே கொண்டுச் சேர்க்கும் சந்தையே!

                      (2)
வாசிக்கும் நூல்முதல் மளிகை வகைகள்
விதவிதக் காய்கனி அணிமணிகள்
நம்ம வீட்டு இல்சமையல்
நாட்டில் உள்ள எச்சுவையும்
நம்மூரில்  உள்ளோர் வாங்கி
நலமுற வளமுறப் பயனுற
சுவைத்துப் பெற்று மேன்மகிழச்
சேர்க்கும் இணைய வர்த்தகச்  சந்தையே!

                     (3)
நோய்ப்பிணி வாட்டியக் காலத்தும் நாணய
நம்பிக்கைச்  சேவை விரைந்து
கேட்கும் மக்களுக்கு நல்கி
கடைவீதி  வாயிலில் கூடாமல்
கொல்நோய் தொற்றுப் பரவாமல்
காத்து வாகையில் பங்காற்றி
இற்றை வழியில்
இணையத் தனஞ்சேர் வர்த்தகச் சந்தையே!
  - சித்திரக் கவிஞர் அகிலமணி ஶ்ரீவித்யா, 11.12.2021.