Wednesday, June 30, 2021

 எதிர்நீச்சலாய் தடுப்பூசியே!

(இரண்டாம் அலையின் முடிவில் வைரஸ் கொரோனா!)

சீனநாடு ஊஹானில் உருவாகிய
சீரழிக்கும் வைரஸ்நோய் கொரோனா
முதலலை இரண்டாம் அலையென
முட்டிமோதி உருமாற்றி மக்களை
உருக்குலையச் செய்ததுப் போதாமல்
உருமாறி மூன்றாம் அலைக்கு
எச்சரிக்கை
உண்டாக்கத் தீய்ந்துப் போனமக்கள்
உச்சமாய் தடுப்பூசித் திட்டத்திற்கு ஒப்பினரே!

(2)
கோவாக்சின் கோவிஷீல்டு ஸ்புட்னிக் - வி
கொரோனா நோய்எதிர்ப்பு தடுப்பூசியாய்
செயல்பட ஏற்றுமதி இறக்குமதி
செய்துநாடு நகர்வுலகு எங்கெங்கும்
தடுப்பூசிகள் பயனளிக்க இயல்புநிலைத்
திருப்பங்கள் மீண்டும் வலம்வர
அரசினர்
நலப்பணியாம் நற்பொருள் வழங்கல்
நலநிதி வழங்கல் யாவும் நலஞ்சேர்த்தே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை, 28.06.2021.


Sunday, June 20, 2021

 அவசரகாலத் தேவைக்குச் சேவையே!

(உருமாறிய கொரோனா 2)
(1)
பொதுமுடக்க நடைமுறைச் சிக்கல்கள்
புதியப்புதிய அறிக்கை மாற்றங்கள்
வாகனப் போக்குவரத்துத் தடைகள்
விதிமுறைக்கு தக்கவாறுத் தேவைகள்
நோயாளியர் சிகிச்சை அவசரங்கள்
நோய்ப்பிணி குணமாக்க மருந்துகள்
ஆக்சிஜன்
காற்று நிரப்பியக் கொள்கலன்கள்
யாவும் அவசரக்காலத் தேவையாகச் சேவையே!

(2)

முன்களச் செவிலியர்தம் முதலுதவி
முன்னிற்க மூச்சுத் திணறும்
நோயாளிக்கு பேருந்து ஆம்புலன்ஸ்
வாகனத்தில் கூடமுன் மருத்துவம்
செய்தனர் மகத்துவத் தன்னார்வலர்
செய்தநல் வயிற்றுக்கு உணவளித்தல்
சேவைத்தொடர
அன்றாட ஆற்றுப்பசிக்கு கைப்பணம்
அன்னதான மேற்பொருளை அன்றரசுச் சேவைதணித்தே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை, 05.06.2021.



p


அடைக்கலம் அரசளித்தே!
(உருமாறியக் கொரோனா வண்ணமே - 2)

(1)
காய்ச்சல் சளியைக் கடந்தோர்
காடுமலையில் பதுங்கியா வாழ்ந்தனர்
விந்தைதான் காடுகளில் வாழ்கின்ற
வீரமிருகமாம் சிங்கமும் புலியும்கூட
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்
கண்டுள்ளதை உறுதிசெய்து வைரஸ்போல்
கன்னாபின்னா
பேச்சலைமோத வண்டலூர்க் கூண்டுகளில்
பீதியில் சிங்கங்கள் கோபக்கண்கள் காட்டிச்சிவந்தே!

(2)
காட்டுச்சிங்கமோ வீட்டுச்சிங்கமோ காட்டின
கடுங்கோப உணர்வுகளை வெளிப்படுத்த
மனிதர்க்கு முகக்கவசம் மிருகத்திற்கு
முடிவுதான் எட்டவில்லை ஆய்விலே
முணுமுணுத்து மூன்றாமலை வெளிப்பட
மத்தியில் கறுப்புசிவப்பு மஞ்சள்பச்சை
பூஞ்சைகள்
தோன்றியதாய் பல்வேறு வைரஸ்நோய்
தாக்க அடைக்கலம் அரசளித்துக் காக்கமுயன்றே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை, 10.06.2021.

Thursday, June 3, 2021

வைதீக முறைப்படி புனித வேள்வியே!
இடம்: திருமலை ; நாள்: 31.05.2021.
நேரம்: காலை 6.00 முதல் இரவு: 11.00 வரை
நிகழ்ச்சி: சுந்தரகாண்டம் சம்பூர்ண அகண்டபாராயணம்

(1)

திருக்கோயில் கதவுகள் மூடியிருக்க
தினம்தினம் நோயாளியர் அதிகரிக்க
மனிதயினம் நோயினின்றுக் குணமடைய
மதிமழுங்கி அச்சத்தால் உறைந்தோர்
இறைவனிடம் முறையிட்டு ஆற்றவும்
இடமின்றித் துன்பநேரம் துடிதுடிக்க
திருமலைத்
திருப்பதியில் பல்வேறு வேள்விகள்
தொலைக்காட்சி வாயிலாகக் காணுமாறு மேற்செய்தே!

(2)

விந்தை விஞ்ஞானம் களவுவிதைக்க
விதியருள் ஆண்டவன் வினைதீர்ப்பாரென
வேண்டினர் திருமலையில் பெருமாளை
வேதவித்யா பீடத்தில் வேள்விகள்
பகவத்கீதை நெடுநாள் பாராயணம்
பரமாச்சாரியார் நல்லுரை நாமகீர்த்தனம்
ஒருநாள்
தவயாகமாகச் சுந்தரக்காண்டம் முற்றோதல்
தொல்லைதரும் நோய்க்கொரோனா தாக்கமறையப் பூசித்தனரே!
சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை, 01.06.2021.



Tuesday, June 1, 2021

 மாயமா மருத்துவமா!

(உருமாறிய கொரோனா இரண்டாம் அலை - பாடல் 3)
சித்தா ஆயுர்வேதம் ஹோமியோபதி
சத்திர சிகிச்சைப் புகழ்அலோபதி
யுனானி என்றே அணிசெய்
வைத்திய மருத்துவர்கள் யாவரும்
வைரஸ் தொற்றுநோய் அவதியான
கடும்காய்ச்சல் நுரையீரல் அரிக்கும்
பீடைச்சளியை
போக்கிப் பிணிதீர்க்கப் போராடிப்
போராடித் தோற்றுப் புதிராய் விழித்தனரே!

(2)

அலோபதி மருத்துவர்கள் கவசவுடை
அணிந்துடல் முழுதும் மூடியவாறு
மக்களுக்கு ஓயாமல் பணிசெய்து
மண்ணுலக மக்களின் வேற்றுநோய்
எதற்கும் பெரிதானச் சிகிச்சைகள்
எதுவுமே செய்வதைத் தவிர்த்துக்
கொரோனாநோய்
மட்டுமே அரசக் கட்டளையென்று
மீட்டுயிர்க் காக்க மாயமா..... மருத்துவமே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை.


இறப்பும் ஈமச்சடங்கும்!
(உருமாறிய கொரோனா இரண்டாம் அலை - பாடல் 4)
(1)
கொரோனா நோயாளியர் ஒவ்வொருவரும்
கணக்கீடு செய்யப்பட்டு மருத்துவமனை
அவசரகால முகாம்கள் இல்லத்தனிமை
அடிப்படையில் கவனிக்கப்பட மக்கள்
அச்சப்பட்டு அச்சப்பட்டு நோய்க்கடிமை
அவரவராக வேலையிழந்துச் செல்வமிழந்து
கல்வியிழந்து
முன்னலை முதியோரைக் காவுவாங்க
இவ்வலை நடுவயதினரை துன்புறுத்திக் காவுவாங்கியதே!

(2)
எரியூட்ட இடமின்றிப் பிணக்கிடங்கில்
எண்ணற்றச் சடலங்கள் குவியலாக
இறந்தோர் ஈமச்சடங்கு எதுவுமின்றி
இடுகாடு மின்மயானம் புதைக்கும்
புதைகுழிகள் தவிரக் கங்கையாறு
என்றே புத்திக்கு எட்டியவகை
வீசிப்போக்க
ஆன்மவுயிர் வீட்டார்ப் புண்ணியமின்றி
ஆண்டவன் ஏற்பதாய் பாவமிகுக் காட்சியே!
சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை, 31.05.2021.