Saturday, November 13, 2021

 சூழ்ச்சி வலைகளில் சுற்றுச்சூழல்!

(டெல்லி தமிழ் இலக்கிய மன்றம்,
அமெரிக்க தொலைக்காட்சி, கோவை வசந்த வாசல்
கவிமன்றம், 42 நாடுகளின்  தமிழ்மொழி அமைப்புகள்)
(10.11.2021 - புதன் மாலை 5.00 மணிக்கு நிகழ்ச்சி)


                         (1)

ஐப்பசி மழையில் அருமை! நற்தலைப்பு!
அன்பே! விபத்தில் வீழாமல் இல்சேர்வோம்!
வல்லரசார் மேலரங்கில் இந்தியா தமிழ்நாடு
வல்லமைப் படைக்க உள்ளரங்கு உள்நிலை
வளர்ச்சி மாற்றம் திட்டமென கைகள்மாறி
உற்சாகம்  ஊண்உடை  உறைவிடம் தரும்இயற்கை
ஊறாகி வீழஉயிர்கள் வாழுமிடம் கீழித்தரமாகி
ஊட்டக்காற்று சுற்றுச்சூழல் கேடாகச் சூழ்ச்சிவலையே!

                            (2)

அய்யகோ!  கருமமே! உயிர்கள்  நிலைப்பது
அனலில் விழுந்தப் புழுவின் நிலையே
அனுதினம் தப்பிப் பிழைத்து வாழ்வது
அச்சம் உச்சம் எங்கும் எங்கெங்கும்
இன்பம்  துன்பம் காலம் அறியாமல்
இச்சை மனிதனோ சொத்துகள் குவிக்க
மலக்கழிவு சாக்கடை குடிநீர்க் குழாயுடைய
மேல்நடக்கும் கல்விமான் போதைக்குடிமான் நாறுதற்போலே!

                            (3)

வாய்விடும் புகையோ வாகனக் கரும்புகையோ
வான்வெளியை மாசுப்படுத்த மாஅழிவே! மாஅழிவே!
நீர்நிலைகள் தூர்வாரித் தூநதிகள்  ஒன்றிணைத்து
நீளுலகு வாழ்வின்றேல் பேரிடரே!  பேரிடரே!
சுத்தம் அசுத்தம் பாராமல் தூய்மைக்கேடு
செய்வோரைத் தண்டிக்காமல் குற்றங் குற்றமே!
பசுமரங்கள் வெட்டிவீழ்த்திப் பால்தரும் பசுக்கள்
பதிமடியச்  செவ்வாய்க் கிரகம்பாய்தல் சூழ்ச்சிவலையே!
      - சித்திரக் கவிஞர் அகிலமணி ஶ்ரீவித்யா,  10.11.2021,கோவை.

                    குழந்தைகள் தினவிழா!

                            ( 24 அடிகள் - நிலைமண்டில ஆசிரியப்பா)
              (வசந்த வாசல் கவிமன்றம், கோவை, 14.11.2021)
            (சிறப்பு: 14.11.2021 - நேரு பிறந்த நாள், குழந்தைகள் தினம்)

ஆண்டுதோறும்  பள்ளியில் வண்ணத் தினவிழா
ஆடல்பாடல்  கட்டுரைக் கதைக்கவிதை போட்டிகள்
ஆசைமாமா நேருவின் வேடமணிந்து ரோஜாதந்து
ஆவலாய் குழந்தைகள் நேருமாமா அங்கிபோலே
தானணிந்து மாறுவேடப் போட்டியில் பங்கேற்றுத்
தான்வெல்ல நல்லுலக வெற்றியாய் முழங்குவர்
ஆம்அவர்கள் பிள்ளையர்  நம்மைப்போல் ஒன்றுகூடி 
ஆய்ந்துப் படைக்கப் படைப்போம் நற்கவிதையே!             (8 அடி)

நம்நாடு மேல்நாடு யாவுமே கொரோனா
நோயை வென்றுமீள நல்லொழுக்கம் நற்பழக்கம்
நம்முள் மீண்டும் மீண்டும் மலர
நன்னாள் பொன்னாள் இன்னாள் இன்னாள்
நாமெல்லாம் பிள்ளைகள் போலே இணைவோம்
நாமெல்லாம் பிள்ளைகள் போலே இணைவோம்
பாரில் பிள்ளைகள் இன்புறவே ஆக்குவோம்
போதுமே! மேன்மயம்! மெய்மரபுச் சொல்லிக்கொடுத்தே!     (16 அடி)

கற்றலில் விதைத்தால் பசுமரத் தாணியாம்
கல்விக் கூடத்தில் குப்பைகள் சேர்க்காமல்
பிஞ்சுகள் மனதில் பாலினக் கொடுமைப்
புகட்டாமல் பால்மனதில் நச்சுவிடம் ஊட்டாமல்
கேடுசெய் ஆசிரியர்கள் நீக்கிநல் ஞானம்
கொண்டோர் அறஞ்செய் கோவில்போல் மாற்றுவோம்
ரோஜா மலர்கள் நாளைய வாழ்வில்
ராஜா போல்நாட்டைக் காக்கநேர்! கொண்டாடுவீரே!            (24 அடி)
    - சித்திரக் கவிஞர் அகிலமணி ஶ்ரீவித்யா, கோவை, 13.11.2021.

Thursday, October 28, 2021

 இந்தியச் சுதந்திர தினவிழா வாழ்த்துப்பா

             (75- ஆம் ஆண்டு - 15 ஆகஸ்ட் 2021)
(வசந்த வாசல் கவிமன்றம் - இணையவழி - 8.8.2021)

                   (பல்லவி)
பாரில் பாரில் முன்னேறு
பாரதம் போலே முன்னேறு

           (அனுபல்லவி)
வானில் வலம்வரும் சூரியன்போல்
வான்புகழ் வல்லரசு நாட்டிலே                          (பாரில்...)

            (சரணம் 1)
பாரதக் கொடியின் வண்ணம்போல்
பாரின மக்கள் கலந்தாடி
பசுமை பாரதம் காப்போம்
புண்ணிய நதிகள் இணைப்போம்

         (சரணம் 2)
அடிமைப் பட்டதோ அக்காலம்
அனைத்தும் தொழில்நுட்பம் இக்காலம்
அன்பெனும்  ஆயுதக் கொடியேந்தி
அவனியில்  வாழ்வோம் பல்லாண்டு....     (பாரில்....)

         (சரணம் 3)
எழுபத்து ஐந்தாம் ஆண்டிலே
எங்கள் சுதந்திரம் அம்ரூத்
எழுவீர் உற்சவம் கொண்டாடி
எதிலும் பரணிப் புகழ்பாடி               (பாரில்....)


வந்தே மாதரம் வந்தே மாதரம்
வாழ்க சுதந்திரம் வாழ்க இந்தியா
வாழ்க  பாரதத் தாயின் மணிக்கொடியே!         
          - சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை.


விஞ்ஞான வித்தகர் அப்துல் கலாம்!
(காலம்: 15.10.1931 -  27.07.2015)
வசந்த வாசல் கவிமன்றம்
27.09.2021 : (வஞ்சிப்பா)

                    (1)
ஜைனுலாப்தீன்  ஆஷியம்மா பெற்றெடுத்த
செல்லமகனார் ஏ.பி. ஜே அப்துல்கலாம்
ஏழ்மையில் இசுலாமியர் ஏறுபோல்
ஏழுகடல் ஏழுமலை எழிற்பூமி
யாவையும்  வாழ்த்தத் தமிழ்நாடுய
இராமேஸ்வரம் தலத்தில் பிறந்தார்
செய்தித்தாள் விநியோகம் செய்தவர்
செய்திட்ட நற்பணியால் வித்தகராகவே!

                 (2)
இயற்பியல், விண்வெளிப் பொறியியல்
இன்னபிற கல்விமுறைப் பட்டங்கள்
அறிவுமொழி கவிதைநூல்கள் ஆக்கிப்பொக்ரான்
அணுநுட்பம் ஆய்ந்துத்துணைக் கோள்ஏவுகணை
செலுத்திநல் விஞ்ஞானியாக இந்தியராணுவச்
சாதனையர் ராக்கெட்டின் பிதாவாகப்
போற்றப்பட பத்மபூஷண் பாரத்ரத்னா
போன்றவிருது பெற்றுத்திறனால் தலைவராகியே!

                      (3)
அகிலத்தார் போற்றிய ஜனாதிபதி
அன்னைப் பூமியில் தந்தையாய்
திருமண வாழ்க்கைத் துறந்துபீஷ்மத்
தமிழ்க்குரு போல்தனியராய்  இளையர்கள்
உற்சாகம் வளர்த்துநாடு வல்லரசாக
வான்தொடும் கனவுகளை காணச்சொல்லி
விமானட்ரோன் துப்பறிஞானம் விஞ்ஞானமென
விரிவுரைகள் ஆற்றும்போது வான்கலந்தாரே!
        - சித்திரக் கவிஞர் அகிலமணி ஶ்ரீவித்யா, கோவை, 24.09.2021.




தேடினால் கிடைக்கும் செல்வங்கள்!
1. தேனமுதத் தமிழ்ச் சங்கம் - மயிலாடுதுறை
2. தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி - அமெரிக்கா
3. வசந்த வாசல் கவிமன்றம் - கோவை
இணைந்து வழங்கிய நிகழ்ச்சி :-  ஆசிரிய விருத்தம் (எண் சீர்)
( 24.10.2021, ஞாயிறு, மாலை 5.00 மணி)

                             (1)

எத்தனைக் கோடிமக்கள் இவ்வுலக நாட்டிலே
          வறியோர் தனவான் நடுத்தரம் என்றே
எத்தனைப் பிரிவுகள் வாழும் வாழ்விலே
          நானிலர் வாழும் சமுதாயக் கூட்டிலே
எத்தகுக் கல்விநுட்பம் எங்குப் பயனோ
          எங்கும் தேடித்தேடி வாழ்க்கைப் பயணம்
எத்திசைப் பணியோ அத்திசையிற் செல்வம்
          குடும்பம் சொந்தம் பந்தம்  வாழ்த்தியே!

                         (2)

நித்தம் நித்தம் உண்டு  உறங்கும்
          நிலையா உயிர்கள் மத்தியில் மனிதராய்
எத்தவம் செய்தோம் செல்வங்கள் தேடிடப்
          பதினாறுச் செல்வமும் பெற்று வாழவே
புத்தியும் சக்தியும் நாளும் கேட்கிறோம்
          புண்ணியக்  கடவுள்முன் சத்தியஐக் கரங்கூப்பி
புத்தம் சீக்கியம் இசுலாம் கிறிஸ்தவம்
          இந்து எனமதத்தார் யாரும் கூடிவுழைத்தே!

                         (3)

தீதும் நன்றும் பிறர்தர வாரா
          தீயன ஒதுக்கிடு; அல்லும்பகலும் ஈட்டிடு
எதுதான் வரினும் அச்சம் தவிர்த்திடு
          என்றோ ஒருநாள் வெல்வோம் நிச்சயம்
இதுதான் வேண்டுமென வஞ்சித்துக் கொன்றுக்
          களவாடிக் கூர்ச்சொல்லால் துன்புறுத்திக் கொய்வதேன்
எதுவும் கிடைக்கப் பாவம் புரியாமல்
           சத்திய நியதியில் தேடியடைவோம் செல்வமே!
  - சித்திரக் கவிஞர் அகிலமணி ஶ்ரீவித்யா, கோவை, 22.10.2021.

Monday, July 5, 2021

 குறள்தந்த குறைவில்லா வாழ்க்கை!

அதிகாரம் 100: பண்புடைமை: கருப்பொருள்: பண்பு
பேரூர் ஆதீனம் : இணையவழி வாசந்தவாசல் தொடர்பு 1
நாள்: 16.06.2021.

(1) நாட்டில்

இந்தியாவில் இந்தியர் வாழ்வரா அல்லது
இன்னல் விளைக்கும் மேலையர் வாழ்வரா
தலைவாசல் பற்பலதேசம் மூடித்தாமே அச்சுறுத்த
தர்மமொழி முன்பகன்று வெந்தப்பின் வேலாகச்
செப்பினர் இடைவெளி, முகக்கவசம், மக்களுக்குள்
சந்தித்தல், பேசுதல் , ஒன்றுகூடிப் போராடல்
போன்றன நீங்கினால் நோய்க்கொரோனா வாராது
பின்பற்ற மேல்மறுத்தால் வைரஸ்தொற்று வந்திடுமென்றே!

(2) நுட்ப வளர்ச்சியில்

மாவுறுதி மத்தியில் பண்புடைமைச் சிந்தையில்
முன்னோர்கள் தாம்போராடி வென்றே சுதந்திரம்
எந்தவளம் இல்லை கண்டீர் ஏனோ
எழில்வளம் சுட்டெரித்துக் காண்கிறோம் வளர்ச்சி
தேசமெங்கும் சுற்றிச்சுற்றி தோழமைப் போற்றிநம்
தேசப்பற்று நம்மரபு ஒற்றுமை மாவொழுக்கம்
யாவையும் மேல்தொழில் நுட்பத்தில் தேய்த்து
யாவரும் நலம்வாழ நல்லுரை யாற்றிவிதைத்தே!

(3) இல்வாழ்வில்

நல்லபால் தன்சுவைக் கெட்டாற்போல வல்லுடல்
நற்சுவை நாட்டார் இழந்துமேல் பொய்யும்
புரட்டும் புகழ்மிக்க ஆடம்பரமா வாழ்வும்
புற்றென அழிக்கும் வன்மை வுணர்வும்
விதைத்துப் பிறருடன் கலந்துப் பழகும்
வளமான வாழ்க்கைப் பண்புமுறைச் சிதைத்து
ஒளியான சந்ததியர் நற்பகலிருந்தும் துன்யிருளில்
ஓரங் கிடப்பதாய் குறைவில்லா வாழ்க்கையே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை, 14.6.2021.

Wednesday, June 30, 2021

 எதிர்நீச்சலாய் தடுப்பூசியே!

(இரண்டாம் அலையின் முடிவில் வைரஸ் கொரோனா!)

சீனநாடு ஊஹானில் உருவாகிய
சீரழிக்கும் வைரஸ்நோய் கொரோனா
முதலலை இரண்டாம் அலையென
முட்டிமோதி உருமாற்றி மக்களை
உருக்குலையச் செய்ததுப் போதாமல்
உருமாறி மூன்றாம் அலைக்கு
எச்சரிக்கை
உண்டாக்கத் தீய்ந்துப் போனமக்கள்
உச்சமாய் தடுப்பூசித் திட்டத்திற்கு ஒப்பினரே!

(2)
கோவாக்சின் கோவிஷீல்டு ஸ்புட்னிக் - வி
கொரோனா நோய்எதிர்ப்பு தடுப்பூசியாய்
செயல்பட ஏற்றுமதி இறக்குமதி
செய்துநாடு நகர்வுலகு எங்கெங்கும்
தடுப்பூசிகள் பயனளிக்க இயல்புநிலைத்
திருப்பங்கள் மீண்டும் வலம்வர
அரசினர்
நலப்பணியாம் நற்பொருள் வழங்கல்
நலநிதி வழங்கல் யாவும் நலஞ்சேர்த்தே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை, 28.06.2021.


Sunday, June 20, 2021

 அவசரகாலத் தேவைக்குச் சேவையே!

(உருமாறிய கொரோனா 2)
(1)
பொதுமுடக்க நடைமுறைச் சிக்கல்கள்
புதியப்புதிய அறிக்கை மாற்றங்கள்
வாகனப் போக்குவரத்துத் தடைகள்
விதிமுறைக்கு தக்கவாறுத் தேவைகள்
நோயாளியர் சிகிச்சை அவசரங்கள்
நோய்ப்பிணி குணமாக்க மருந்துகள்
ஆக்சிஜன்
காற்று நிரப்பியக் கொள்கலன்கள்
யாவும் அவசரக்காலத் தேவையாகச் சேவையே!

(2)

முன்களச் செவிலியர்தம் முதலுதவி
முன்னிற்க மூச்சுத் திணறும்
நோயாளிக்கு பேருந்து ஆம்புலன்ஸ்
வாகனத்தில் கூடமுன் மருத்துவம்
செய்தனர் மகத்துவத் தன்னார்வலர்
செய்தநல் வயிற்றுக்கு உணவளித்தல்
சேவைத்தொடர
அன்றாட ஆற்றுப்பசிக்கு கைப்பணம்
அன்னதான மேற்பொருளை அன்றரசுச் சேவைதணித்தே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை, 05.06.2021.



p


அடைக்கலம் அரசளித்தே!
(உருமாறியக் கொரோனா வண்ணமே - 2)

(1)
காய்ச்சல் சளியைக் கடந்தோர்
காடுமலையில் பதுங்கியா வாழ்ந்தனர்
விந்தைதான் காடுகளில் வாழ்கின்ற
வீரமிருகமாம் சிங்கமும் புலியும்கூட
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்
கண்டுள்ளதை உறுதிசெய்து வைரஸ்போல்
கன்னாபின்னா
பேச்சலைமோத வண்டலூர்க் கூண்டுகளில்
பீதியில் சிங்கங்கள் கோபக்கண்கள் காட்டிச்சிவந்தே!

(2)
காட்டுச்சிங்கமோ வீட்டுச்சிங்கமோ காட்டின
கடுங்கோப உணர்வுகளை வெளிப்படுத்த
மனிதர்க்கு முகக்கவசம் மிருகத்திற்கு
முடிவுதான் எட்டவில்லை ஆய்விலே
முணுமுணுத்து மூன்றாமலை வெளிப்பட
மத்தியில் கறுப்புசிவப்பு மஞ்சள்பச்சை
பூஞ்சைகள்
தோன்றியதாய் பல்வேறு வைரஸ்நோய்
தாக்க அடைக்கலம் அரசளித்துக் காக்கமுயன்றே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை, 10.06.2021.

Thursday, June 3, 2021

வைதீக முறைப்படி புனித வேள்வியே!
இடம்: திருமலை ; நாள்: 31.05.2021.
நேரம்: காலை 6.00 முதல் இரவு: 11.00 வரை
நிகழ்ச்சி: சுந்தரகாண்டம் சம்பூர்ண அகண்டபாராயணம்

(1)

திருக்கோயில் கதவுகள் மூடியிருக்க
தினம்தினம் நோயாளியர் அதிகரிக்க
மனிதயினம் நோயினின்றுக் குணமடைய
மதிமழுங்கி அச்சத்தால் உறைந்தோர்
இறைவனிடம் முறையிட்டு ஆற்றவும்
இடமின்றித் துன்பநேரம் துடிதுடிக்க
திருமலைத்
திருப்பதியில் பல்வேறு வேள்விகள்
தொலைக்காட்சி வாயிலாகக் காணுமாறு மேற்செய்தே!

(2)

விந்தை விஞ்ஞானம் களவுவிதைக்க
விதியருள் ஆண்டவன் வினைதீர்ப்பாரென
வேண்டினர் திருமலையில் பெருமாளை
வேதவித்யா பீடத்தில் வேள்விகள்
பகவத்கீதை நெடுநாள் பாராயணம்
பரமாச்சாரியார் நல்லுரை நாமகீர்த்தனம்
ஒருநாள்
தவயாகமாகச் சுந்தரக்காண்டம் முற்றோதல்
தொல்லைதரும் நோய்க்கொரோனா தாக்கமறையப் பூசித்தனரே!
சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை, 01.06.2021.



Tuesday, June 1, 2021

 மாயமா மருத்துவமா!

(உருமாறிய கொரோனா இரண்டாம் அலை - பாடல் 3)
சித்தா ஆயுர்வேதம் ஹோமியோபதி
சத்திர சிகிச்சைப் புகழ்அலோபதி
யுனானி என்றே அணிசெய்
வைத்திய மருத்துவர்கள் யாவரும்
வைரஸ் தொற்றுநோய் அவதியான
கடும்காய்ச்சல் நுரையீரல் அரிக்கும்
பீடைச்சளியை
போக்கிப் பிணிதீர்க்கப் போராடிப்
போராடித் தோற்றுப் புதிராய் விழித்தனரே!

(2)

அலோபதி மருத்துவர்கள் கவசவுடை
அணிந்துடல் முழுதும் மூடியவாறு
மக்களுக்கு ஓயாமல் பணிசெய்து
மண்ணுலக மக்களின் வேற்றுநோய்
எதற்கும் பெரிதானச் சிகிச்சைகள்
எதுவுமே செய்வதைத் தவிர்த்துக்
கொரோனாநோய்
மட்டுமே அரசக் கட்டளையென்று
மீட்டுயிர்க் காக்க மாயமா..... மருத்துவமே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை.


இறப்பும் ஈமச்சடங்கும்!
(உருமாறிய கொரோனா இரண்டாம் அலை - பாடல் 4)
(1)
கொரோனா நோயாளியர் ஒவ்வொருவரும்
கணக்கீடு செய்யப்பட்டு மருத்துவமனை
அவசரகால முகாம்கள் இல்லத்தனிமை
அடிப்படையில் கவனிக்கப்பட மக்கள்
அச்சப்பட்டு அச்சப்பட்டு நோய்க்கடிமை
அவரவராக வேலையிழந்துச் செல்வமிழந்து
கல்வியிழந்து
முன்னலை முதியோரைக் காவுவாங்க
இவ்வலை நடுவயதினரை துன்புறுத்திக் காவுவாங்கியதே!

(2)
எரியூட்ட இடமின்றிப் பிணக்கிடங்கில்
எண்ணற்றச் சடலங்கள் குவியலாக
இறந்தோர் ஈமச்சடங்கு எதுவுமின்றி
இடுகாடு மின்மயானம் புதைக்கும்
புதைகுழிகள் தவிரக் கங்கையாறு
என்றே புத்திக்கு எட்டியவகை
வீசிப்போக்க
ஆன்மவுயிர் வீட்டார்ப் புண்ணியமின்றி
ஆண்டவன் ஏற்பதாய் பாவமிகுக் காட்சியே!
சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை, 31.05.2021.

Saturday, May 29, 2021

 சீரிழந்தச் செல்வம் காணீர்!

இலக்கியச் சோலை- கோவை சிறப்பிதழ்
(உருமாறிய வைரஸ் கொரோனா- இரண்டாம் அலை)

இயற்கை வளமும் கல்வி ஞானமும்
ஈடிலாச் செல்வங்கள் காணீர்
இரண்டு விழிகள் இழந்தோர்
யாரும் குருடர்த் தாமே
இன்பம் எங்கோ சேர்ந்திட
நல்லொளி இழந்தோம்
இருளில் இந்திய நாடு
இற்றைக் கொரோனா நோய்ப்போல் காட்சியே!

இல்லத்தில் தாம்தம் குழந்தையர் மட்டுமே
வாய்மூடி கைக்கழுவி மத்தியில்
இடைவெளிப் பின்பற்றி யாவரும்
ஊரில் வசிக்க
இரண்டாம் அலையில் கொரோனா
இச்சக மக்கள் அமைதி
தடுப்பூசி வாழ்க்கை வரலாறு
தாமே காணீர் சீரிழந்தச் செல்வமே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை, 23.04.2021.

Tuesday, January 26, 2021

பன்னிரு இதழ்களிலும் என்கவிதை! (Episode -12)

 

12. சுதந்திர இந்தியாவும் சுடராதோ!

 

                  (1)

வந்தே மாதரம் வந்தே மாதரம்

வணங்கி வான்புகழ் வாழ்த்துவோம்

இயற்கை அரண்கள் இன்பம்

யாவையும் காப்போம்

பசுமை பசுமை பார்ப்புகழ்

வோங்க உழைப்போம்

மேலை உலகோர் வியக்க

மேதியில் வளமை வென்று வாழ்த்துவோம்!

 

                  (2)

 

வந்தே மாதரம் வந்தே மாதரம்

வணங்கி வான்புகழ் வாழ்த்துவோம்

தொழிலில் நுட்பம் கற்றே

தொல்லை யாவும் அழிப்போம்

துளைக்கும் துன்பம் துரத்தி

துரிதப் பணிகள் ஆற்றுவோம்

கற்போம் கொரோனா பாடம்

கடமைக் கடவுள் போற்றி வாழ்த்துவோம்!

 

                  (3)

 

வந்தே மாதரம் வந்தே மாதரம்

வணங்கி வான்புகழ் வாழ்த்துவோம்

இந்திய நாடு ஒன்றே

இருகரங் கூப்பு நன்றே

முன்னிரும் போர்கள் விலக்கி

முன்னேற்றப் பாதைத் துணிந்து

மக்கள் நலனிற் கலந்து

மண்ணின் மரபுக் காத்து வாழ்த்துவோம்!

            -சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, 30.6.2020.

பன்னிரு இதழ்களிலும் என்கவிதை! (Episode - 11)

 

11. பெண்டிரின் புகழே!

                  (1)

 

இன்பமோ துன்பமோ புகழுருப் பெண்ணே

இன்னற் காலத்தில் இல்லத்தில் பேரொளி

மழலையர்ப் பேச்சுக்குத் தேன்குரல் எதிரொலி

மட்டிலா மகிழ்ச்சி மக்களுக்குச் சேர்த்தே

நித்தமும் காண்பாள் நிறைமதி நிம்மதி

நிழலாக வீட்டிலே முழுமையும் காப்பாள்

சமையற் செய்துமே நற்சுவைக் காப்பாள்

சுகத்துடன் குடும்ப நலமே வாழப்புகழே!

                 

                  (2)

 

நோய்க்கால மாமருந்து அன்பவள் கருணை

நோய்விலக வைத்தியம் பேருதவிப் பாரிலே

சிக்கனம் கண்ணியம் காத்தனர்ப் பெண்டிர்

சிற்சில மூலிகையில் நீராவி வைத்தியம்

கொரோனா வைரஸ் தாக்கா வண்ணம்

கொடுங்கோல் வறுமை மாய்க்கா வண்ணம்

தன்னுழைப்பு நல்கியே செவிலியர்த் தாயாகி

தன்னுடன் பல்லோரின் நல்லுயிர்க் காத்தே!

 

                  (3)

 

அங்காடிச் சந்தை அலுவலகம் தாண்டியே

அனுதின வரிகளும் இரட்டிப்பு ஆகிடத்

தயங்காமல் தன்குடும்பத் தேரினை நாளும்

தள்ளாமல் ஓட்டினள் தூமலர் ஆகினள்

துகில்தரும் பெண்மணி துயரறுப் பெண்மணி

தெள்ளமுதப் பெண்மணி தேசியப் பெண்மணி

பலகாலச் சேவைக்குப் பொன்னாரம் சூட்டியே

பெண்குலம் வாழ்த்துவம் புகழொலி வாழ்கவே!

            -சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, 30.06.2020.

 

 

 

பன்னிரு இதழ்களிலும் என்கவிதை! (Episode - 10)

 

10. சமூகத் திருமணமும் விழாவும்!

(கொரோனா நோய்க்காலம் - முன்னும் பின்னும்)

 

                  (1)

 

அவசரக் காலத்தில் அன்றாடக் கொண்டாட்டம்

அன்பே இல்லை இல்லை

ஆண்பாதி பெண்பாதி

ஆடலும் பாடலும் விமரிசைத்

திருமணம் நடக்கவே இல்லை

முன்செய்த நிச்சயம் தள்ளிப்போக

முன்னும் பின்னுமாய்

சமூகத் திருமணம் திருமணம் திருமணமே!

 

                  (2)

 

திருமண மண்டபம் கோவில் அனைத்துமே

தள்ளின தள்ளின விழாக்களை

மகாகும்ப நன்னீரோ மாசக்தி

வேள்வியோ கொண்டாட்ட

நாளோ இல்லை இல்லை

வழிபாடு வித்தை கலைகள்

வசந்த உற்சவம் யாவுந்தடையே

தேரோட்டம் தெப்போட்டம் காண்போரும் இல்லையே!

 

                  (3)

 

கூட்டமாய் மக்கள் சேர்வதும் இல்லை

சோர்வாய்ச் சாய்ந்து உறங்கவும்

இல்லை இல்லை

துள்ளலாய்ப் பண்டிகை விழாவும்

புண்ணிய யாத்திரை மேதியுலா

இல்லை போகவரச் செய்பணிச்

செய்தே அகமோ புறமோ

சிலையாய் சிந்தனைச் சவமாய் வாழ்ந்திடவே!

      -சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, 30.6.2020.

பன்னிரு இதழ்களிலும் என்கவிதை! ( Episode - 9)

 

9. உதவியா இடையூறா!

உள்ளூரோ வெளிமாநில இடங்களோ

உதவிக்கு ஆம்புலன்ஸ் வாகனம்

முகாமில் கொரோனாப் பரிசோதனை

மருத்துவ வசதிகள் நோய்க்கான

மாத்திரை காப்பீடு தனிமைக்கு

மருத்துவ மனையிற் தனிப்படுக்கை

நியாய விலைக்கடை வழங்கும்

நிவாரண பொருட்கள் பணவுதவி நல்கவரசே!

 

            (2)

 

அச்சத்தில் உறைந்த மக்களை

அக்கறை கொள்ளச் செய்து

வாழ்வாதாரப் பணிக்குத் தளர்வுகள்

வாய்ப்புநல் பணிகள் உருவாக்கித்

தந்தாலும் தினப்பணி ஊழியர்கள்

தவித்துத் தன்னார்வலர் அளித்தக்

கொடைகள் பெற்றுமேன் வசிக்க

கொணர இயலா வசந்தம் இடையூறே!

 

            (3)

 

பற்பல நாட்டோர் தன்னாட்டுப்

பல்லின மக்களைத் தான்காக்க

விமானச் சேவையிற் சிறந்து

விரைவில் தாயகஞ் சேர்க்க

உள்ளோரும் வந்தோரும் கூடிமேல்

உழைத்துப் பிழைக்க வழிமுறை

வளர்ச்சியா வளமா வளரும்

வரவேற்கும் உள்ளத்தார் வாழ்த்த வாழ்க்கையே!

            -சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, 29.06.2020.

 

 

 

 

பன்னிரு இதழ்களிலும் என்கவிதை! (Episode - 8)

 

8. கோவிட் 19 - புனிதம் எங்கே!

 

         (1)

கோவிட் பத்தொன்பது கொரோனா

கோவில் வழிபாட்டுத் தலங்களை

விட்டுவிட வில்லை நோய்க்கு

வேண்டுதல் செய்துப் புண்ணியங்

காண்கும் பக்தர்மேற் தொற்றக்

கோவில் நடைகள் சாத்தின

      எங்கோ

புனிதம் இருளில் இறைவன் சன்னதியே!

 

            (2)

 

திருக்கோவில் தேவாலயம் கோட்டைமசூதி

திருத்தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி

ஆர்ப்பரிக்கும் கடலலை யிசைராகம்

ஆர்வலர்கள் கேட்காமல் மதிவேகம்

கட்டுக்குள் அடங்காமல் மனிதநேயம்

கடந்தாசைக் கூடிகூடியே இதயந்தேய

      தீயொழுக்கம்

மண்ணின மக்களைத் துண்டாக்க கொல்நோயே!

 

            (3)

 

கட்டுப்பாடு தளர்வுகள் வந்தாலும்

காணாத தளர்வுதான் வழிபாட்டில்

முறைமைத் தவறாது முன்னேற

மறையும் பிணிகள் மெய்யாக

அஞ்ஞானம் விஞ்ஞானம் மெய்ஞானம்

அன்பகத்தைச் சிதைக்கா வண்ணம்

      ஆன்மிகப்

பாதையில் நன்கொளிர வைரஸ்கொரோனா தானழியுமே!

            -சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, 29.06.2020.

 

 

பன்னிரு இதழ்களிலும் என்கவிதை! (Episode - 7)

 

7. கல்வியும் கேள்வியும்!

           

            (1)

 

விழித்திரு விலகியிரு வீட்டிலிரு என்ற

விதிமுறைத் தொடரப் பள்ளிகள் கல்லூரி

பல்கலைக் கழகங்கள் பன்னிசைக் கூடங்கள்

பற்பலவும் மூடப்பட்டு மாணவர்கள் இல்லடங்க

செய்வது அறியாமல் பெற்றோர்தம் வேலைகள்

பாரமாகி இன்னலால் கேள்விகள் எழுந்தன

எந்நாள் இந்நிலை மாறுமோ

அந்நாள் விரைவில் வாராதோ மாற்றமே!

 

            (2)

 

துள்ளல் நடையில் எழுந்து விரைவில்

தத்தம் கடமை முடித்துத் தனியார்

வகுப்பில் பயின்றுத் தேர்வில் வெற்றியை

விதைக்க நினைத்துக் காரியங் கெடமேல்

யாவரும் பொதுநிலைத் தேர்வில் வாகையர்

யாவரும் வாகையர் என்முடிவு யேற்க

அறிவும் அறிவியலும் யெங்கே

அன்றாட வாழ்வில் கொரோனா தாக்கமே!

 

            (3)

 

அடுத்து அடுத்து விடுமுறை மகிழ்ச்சி

அளித்ததோ இல்லையோ ஆர்வமாய் இணையம்

கல்வியை வளர்த்துக் காட்டின அனலாய்

கணிணிமுன் காந்தக் கண்கள் சிவக்க

கவலை மனவழுத்தஞ் சேர்ந்து வல்லரசு

கற்பனைக் கனவாக மாயமோ ஞானக்

கணைகள் நுரையீரல் தாக்க

கருப்பு வெள்ளைத் திசையிலே கொரோனாவே!

      -சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, 29.6.2020.