Saturday, June 13, 2020

அதோ வருகிறான் பாரதி!


அதோ வருகிறான் பாரதி!



பாரதி பாரதி பாரதி - பாரினில்
பாரதம் வென்றவர் பாரதி
பாரதி கண்ட
கனவுகள் யாவும்
நவயுகந் தன்னில் நிகழ
அவனே கதிகதி
சாரதி சாரதி பூமியில்
நானிலர் யாருமே பாருதி - பாரதமே!         (8-அடி)
     
பேரொளி பேரொளி பாருளே - பாவொலி
பேச்சிலே மூச்சிலே பாரதி
பூத்தன பூவினம் பூமியில்
பூத்தெழு பூக்கள் புரட்சியே
பெண்கல்விப் பெற்றனர்
பார்மேல் வுலவினர்
ஞானக்கோள் கண்டங் கடந்தே
நிதியருட் பறவைப்போல் ஆகினர் - ஆகினரே!       (16- அடி)

தோம்தோம் வியந்தோம் கவிமதி - மேலோர்
தேசமே விஞ்சுவோம் பாரதி
வாழுங் கவித்தேன் சுவைநதி
வாழ்வாய் வருகிறான்
பாரதி பாரதி
சத்தியம் காப்பான் சகமினி
வல்லரசுக் காண்கவே பாரதி
நல்நாடு நம்வசந்தம் யில்வறுமை - ஆகியதே!       (24-அடி)

   -கவிதாயினி அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை. 

கவிதைக் களத்தில் காப்பியக் கலித்துறை!


கவிதைக் களத்தில் காப்பியக் கலித்துறை!

வியப்போ வியப்புக் கலித்துறைவிருந்
      தாலே விருத்தம்
முயற்சிக் கனிந்தே இனிநாளிலே
      எழுத்தார் எழுதா
பயன்கள் உளவோ கவிதைக்கள
      உதித்தே தொடர்ந்துக்
கயமைக் களைய நிதர்சனமொழி
      வரைந்தே அறிவீர்!                      (4 - நெடிலடி)

தமிழர்க் கவிகள் அவையிலேகவி
      தனித்து அறிவோம்
அமிழ்தம் மதுரக் கவிஆசுமே
      விகடக் கவிமே
தமிழில் விரிவித் தரக்கவியுமே
      கடவச் சித்ர
நிமித்த வரையிற் பரவியேகவி
      பெரும யாத்தே!                         ( 8 - நெடிலடி)

சிந்தா மணிமேல் இலக்கியமதி
      நீங்கி யிப்பா
இந்நாள் யெழுதி மலருதிநிதி
      பாரும் களமேல்
அந்நாள் யடுத்து வியந்ததைமறு
      முறையும் பாடி
எந்நாள் எவரும் யெழுதமேலினி
      வாழ வாழ்த்து!                          (12 - நெடிலடி)

புலமேல் மறையும் இலக்கியமழைப்
      புலத்தில் தோன்ற
நலமேல் யதனைக் களங்காத்துமே
      செய்து நாளும்
நிலமேல் செழித்துச் சுவைமொழிக்கவி
      வானில் யானும்
வலமே வளர்த்துப் புகழ்ச்சாற்றியே
      களத்தில் விதைத்து!                    (16 - நெடிலடி)

   -சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா,
              கோவை.
(குறிப்பு: கவிதைக் களத்தில் மிகுதியாக எடுத்தாளப் படாமல் அருகும்
கலித்துறை வகையால் இப்பாடல் எழுத்தப்பட்டுள்ளது.)

கவிக்குழந்தையும் தெய்வமும்!


கவிக்குழந்தையும் தெய்வமும்!

ஒளிவு மறைவின்றி ஒளியாக ஈதோ
ஓங்கியக் குரலில் ஒலிக்கிறேன் கவிமொழி
தந்தைக்கு மேலாகத் தமிழ்ப்பணி யாற்றத்
தன்மையிற் கொண்டேன் சபதம் அன்றே
நற்றமிழ்க் கடினமல்லக் கற்கண்டே என்றேன்
நல்லதுயென் மகளே முடிந்தால் படித்திடு  
என்றனர்ப் பார்ப்போம் முடித்தேன்
என்மனம் இனிக்க முதுநிலைத் தமிழே!

சத்திரச் சிகிச்சை நலிவுடல், கைக்குழந்தை
சரிந்தும் சாய்ந்தும் விரல்பற்றும் முன்பிள்ளை
உள்ளத் துன்பம் தனிமைக் கொடுமை
உள்தமிழே உண்டேன் யெழுந்தேன் கண்டேன்
உண்மையில் ஆறுமுக வேலவனை அந்நாள்
அற்றைப்பின் காட்சியாய் சாட்சியாய் ஆண்டவனே
அன்பினர் அவருடன் கலந்தேன்
சிங்கப்பூரில் ஆய்வுக்கண் நற்றமிழ் நற்செய்தே!

நற்கவிஞர் மேற்கதா ஆசிரியர்ப் பல்லோரின்
நற்படைப்பு நல்லிசை ஆய்ந்தேன் திரட்டினேன்
நூலாக ஆக்கியரின் பட்டியலில் நுண்மானாக
நூற்புலஞ் சார்ந்துமுத் தமிழ்மாலை சூட்டினேன்
முத்தமிழ் வேலர்க்குப் பல்லுலகும் நோக்கியே
முன்நூற் தொட்டுமேன் இறையருட் பாடல்கள்
பாடியேநற் சிங்கப்பூர்க் கோவிலிரும்
பன்முகக் கடவுளின் தாள்பணிந்துப் போற்றியே!

அத்துடன் மனந்தொடும் மென்மையா னக்கவிதைகள்
ஆக்கிச் சரித்திரச் செம்மொழி மாநாட்டில்
நீங்காப் புகழ்த்தமிழ்ச் செம்மொழி வணங்கி
நிறைவுடன் பலஆய்வுக் கட்டுரைகள் நல்கிச்
சீர்தரும் சித்திரக் கவிதைகள் யாத்து
சீர்த்தமிழ் நாடுபுக்கி விட்டகன்றப் பெருங்கலை
பேறுபெறப் பற்றின்றிப் பார்நோக்கிப்
பாருங்கால் முத்தமிழ் மாலையின் ஈற்றடிமுதலே!

                -கவிதாயினி அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை,
                     

எனது ஆசான்!


(வசந்த வாசல் கவிமன்றம்- 9.09.2018)

கு: இருட்டு ; ரு: வெளிச்சம்
ரு: வெளிச்சம்


எனது ஆசான் எனது ஆசான்      
என்றும் இன்பம் நல்கிடும் ஆசான்
ஒழுக்கம் அறிவு துணிவு அருளும்
ஒப்பிலா ஆசான் ஒளிமதி ஆசான்
மதியிலா மாணவர் மதிநிறை ஆகுவர்
மனதிற் தெளிவு வல்லமைப் பெறுவர்
எளிமை ஏற்றம் பகுத்து மொழிந்து
எளிதிற் திறமைப் புகுத்துநல் ஆசானே!

உருண்டை உலகம் போற்றும் ஆசான்
உயரியப் புராணம் போதித்த ஆசான்
இதிகாசம் பாரதம் வாழ்த்திய ஆசான்
இன்னல் வாழ்வை வென்ற ஆசான்
உள்ளும் புறமும் நிலைத்த ஆசான்
உணர்வில் தோழமை விதைத்த ஆசான்
நன்றும் தீதும் சுட்டிய ஆசான்
நன்மைப் பாதைக் காட்டிய ஆசானே!

ஆசை அன்பு அளவுகோல் நீட்டி
ஆணோ பெண்ணோ வரைகள் காட்டி
பாலும் நீரும் ஆய்ந்து வூட்டி
பாரிற் பயனுறக் கல்வியுங் கூட்டி
கலைகள் சுவைகள் பண்பாடு நாட்டி
கருணை யிதயம் மாபக்தி நீள(த்)
தர்மம் தானம் சத்தியம் நிலைய
தற்புகழ் யின்றிப் பணிமேல் ஆற்றினரே!
        -கவிதாயினி அகிலமணி ஸ்ரீவித்யா,
              கோவை, 9.09.2018.