Saturday, November 13, 2021

                    குழந்தைகள் தினவிழா!

                            ( 24 அடிகள் - நிலைமண்டில ஆசிரியப்பா)
              (வசந்த வாசல் கவிமன்றம், கோவை, 14.11.2021)
            (சிறப்பு: 14.11.2021 - நேரு பிறந்த நாள், குழந்தைகள் தினம்)

ஆண்டுதோறும்  பள்ளியில் வண்ணத் தினவிழா
ஆடல்பாடல்  கட்டுரைக் கதைக்கவிதை போட்டிகள்
ஆசைமாமா நேருவின் வேடமணிந்து ரோஜாதந்து
ஆவலாய் குழந்தைகள் நேருமாமா அங்கிபோலே
தானணிந்து மாறுவேடப் போட்டியில் பங்கேற்றுத்
தான்வெல்ல நல்லுலக வெற்றியாய் முழங்குவர்
ஆம்அவர்கள் பிள்ளையர்  நம்மைப்போல் ஒன்றுகூடி 
ஆய்ந்துப் படைக்கப் படைப்போம் நற்கவிதையே!             (8 அடி)

நம்நாடு மேல்நாடு யாவுமே கொரோனா
நோயை வென்றுமீள நல்லொழுக்கம் நற்பழக்கம்
நம்முள் மீண்டும் மீண்டும் மலர
நன்னாள் பொன்னாள் இன்னாள் இன்னாள்
நாமெல்லாம் பிள்ளைகள் போலே இணைவோம்
நாமெல்லாம் பிள்ளைகள் போலே இணைவோம்
பாரில் பிள்ளைகள் இன்புறவே ஆக்குவோம்
போதுமே! மேன்மயம்! மெய்மரபுச் சொல்லிக்கொடுத்தே!     (16 அடி)

கற்றலில் விதைத்தால் பசுமரத் தாணியாம்
கல்விக் கூடத்தில் குப்பைகள் சேர்க்காமல்
பிஞ்சுகள் மனதில் பாலினக் கொடுமைப்
புகட்டாமல் பால்மனதில் நச்சுவிடம் ஊட்டாமல்
கேடுசெய் ஆசிரியர்கள் நீக்கிநல் ஞானம்
கொண்டோர் அறஞ்செய் கோவில்போல் மாற்றுவோம்
ரோஜா மலர்கள் நாளைய வாழ்வில்
ராஜா போல்நாட்டைக் காக்கநேர்! கொண்டாடுவீரே!            (24 அடி)
    - சித்திரக் கவிஞர் அகிலமணி ஶ்ரீவித்யா, கோவை, 13.11.2021.

No comments:

Post a Comment