Saturday, June 13, 2020

கவிதைக் களத்தில் காப்பியக் கலித்துறை!


கவிதைக் களத்தில் காப்பியக் கலித்துறை!

வியப்போ வியப்புக் கலித்துறைவிருந்
      தாலே விருத்தம்
முயற்சிக் கனிந்தே இனிநாளிலே
      எழுத்தார் எழுதா
பயன்கள் உளவோ கவிதைக்கள
      உதித்தே தொடர்ந்துக்
கயமைக் களைய நிதர்சனமொழி
      வரைந்தே அறிவீர்!                      (4 - நெடிலடி)

தமிழர்க் கவிகள் அவையிலேகவி
      தனித்து அறிவோம்
அமிழ்தம் மதுரக் கவிஆசுமே
      விகடக் கவிமே
தமிழில் விரிவித் தரக்கவியுமே
      கடவச் சித்ர
நிமித்த வரையிற் பரவியேகவி
      பெரும யாத்தே!                         ( 8 - நெடிலடி)

சிந்தா மணிமேல் இலக்கியமதி
      நீங்கி யிப்பா
இந்நாள் யெழுதி மலருதிநிதி
      பாரும் களமேல்
அந்நாள் யடுத்து வியந்ததைமறு
      முறையும் பாடி
எந்நாள் எவரும் யெழுதமேலினி
      வாழ வாழ்த்து!                          (12 - நெடிலடி)

புலமேல் மறையும் இலக்கியமழைப்
      புலத்தில் தோன்ற
நலமேல் யதனைக் களங்காத்துமே
      செய்து நாளும்
நிலமேல் செழித்துச் சுவைமொழிக்கவி
      வானில் யானும்
வலமே வளர்த்துப் புகழ்ச்சாற்றியே
      களத்தில் விதைத்து!                    (16 - நெடிலடி)

   -சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா,
              கோவை.
(குறிப்பு: கவிதைக் களத்தில் மிகுதியாக எடுத்தாளப் படாமல் அருகும்
கலித்துறை வகையால் இப்பாடல் எழுத்தப்பட்டுள்ளது.)

No comments:

Post a Comment