Saturday, June 13, 2020

எனது ஆசான்!


(வசந்த வாசல் கவிமன்றம்- 9.09.2018)

கு: இருட்டு ; ரு: வெளிச்சம்
ரு: வெளிச்சம்


எனது ஆசான் எனது ஆசான்      
என்றும் இன்பம் நல்கிடும் ஆசான்
ஒழுக்கம் அறிவு துணிவு அருளும்
ஒப்பிலா ஆசான் ஒளிமதி ஆசான்
மதியிலா மாணவர் மதிநிறை ஆகுவர்
மனதிற் தெளிவு வல்லமைப் பெறுவர்
எளிமை ஏற்றம் பகுத்து மொழிந்து
எளிதிற் திறமைப் புகுத்துநல் ஆசானே!

உருண்டை உலகம் போற்றும் ஆசான்
உயரியப் புராணம் போதித்த ஆசான்
இதிகாசம் பாரதம் வாழ்த்திய ஆசான்
இன்னல் வாழ்வை வென்ற ஆசான்
உள்ளும் புறமும் நிலைத்த ஆசான்
உணர்வில் தோழமை விதைத்த ஆசான்
நன்றும் தீதும் சுட்டிய ஆசான்
நன்மைப் பாதைக் காட்டிய ஆசானே!

ஆசை அன்பு அளவுகோல் நீட்டி
ஆணோ பெண்ணோ வரைகள் காட்டி
பாலும் நீரும் ஆய்ந்து வூட்டி
பாரிற் பயனுறக் கல்வியுங் கூட்டி
கலைகள் சுவைகள் பண்பாடு நாட்டி
கருணை யிதயம் மாபக்தி நீள(த்)
தர்மம் தானம் சத்தியம் நிலைய
தற்புகழ் யின்றிப் பணிமேல் ஆற்றினரே!
        -கவிதாயினி அகிலமணி ஸ்ரீவித்யா,
              கோவை, 9.09.2018.

No comments:

Post a Comment