Saturday, June 13, 2020

கவிக்குழந்தையும் தெய்வமும்!


கவிக்குழந்தையும் தெய்வமும்!

ஒளிவு மறைவின்றி ஒளியாக ஈதோ
ஓங்கியக் குரலில் ஒலிக்கிறேன் கவிமொழி
தந்தைக்கு மேலாகத் தமிழ்ப்பணி யாற்றத்
தன்மையிற் கொண்டேன் சபதம் அன்றே
நற்றமிழ்க் கடினமல்லக் கற்கண்டே என்றேன்
நல்லதுயென் மகளே முடிந்தால் படித்திடு  
என்றனர்ப் பார்ப்போம் முடித்தேன்
என்மனம் இனிக்க முதுநிலைத் தமிழே!

சத்திரச் சிகிச்சை நலிவுடல், கைக்குழந்தை
சரிந்தும் சாய்ந்தும் விரல்பற்றும் முன்பிள்ளை
உள்ளத் துன்பம் தனிமைக் கொடுமை
உள்தமிழே உண்டேன் யெழுந்தேன் கண்டேன்
உண்மையில் ஆறுமுக வேலவனை அந்நாள்
அற்றைப்பின் காட்சியாய் சாட்சியாய் ஆண்டவனே
அன்பினர் அவருடன் கலந்தேன்
சிங்கப்பூரில் ஆய்வுக்கண் நற்றமிழ் நற்செய்தே!

நற்கவிஞர் மேற்கதா ஆசிரியர்ப் பல்லோரின்
நற்படைப்பு நல்லிசை ஆய்ந்தேன் திரட்டினேன்
நூலாக ஆக்கியரின் பட்டியலில் நுண்மானாக
நூற்புலஞ் சார்ந்துமுத் தமிழ்மாலை சூட்டினேன்
முத்தமிழ் வேலர்க்குப் பல்லுலகும் நோக்கியே
முன்நூற் தொட்டுமேன் இறையருட் பாடல்கள்
பாடியேநற் சிங்கப்பூர்க் கோவிலிரும்
பன்முகக் கடவுளின் தாள்பணிந்துப் போற்றியே!

அத்துடன் மனந்தொடும் மென்மையா னக்கவிதைகள்
ஆக்கிச் சரித்திரச் செம்மொழி மாநாட்டில்
நீங்காப் புகழ்த்தமிழ்ச் செம்மொழி வணங்கி
நிறைவுடன் பலஆய்வுக் கட்டுரைகள் நல்கிச்
சீர்தரும் சித்திரக் கவிதைகள் யாத்து
சீர்த்தமிழ் நாடுபுக்கி விட்டகன்றப் பெருங்கலை
பேறுபெறப் பற்றின்றிப் பார்நோக்கிப்
பாருங்கால் முத்தமிழ் மாலையின் ஈற்றடிமுதலே!

                -கவிதாயினி அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை,
                     

No comments:

Post a Comment