Tuesday, June 1, 2021

 மாயமா மருத்துவமா!

(உருமாறிய கொரோனா இரண்டாம் அலை - பாடல் 3)
சித்தா ஆயுர்வேதம் ஹோமியோபதி
சத்திர சிகிச்சைப் புகழ்அலோபதி
யுனானி என்றே அணிசெய்
வைத்திய மருத்துவர்கள் யாவரும்
வைரஸ் தொற்றுநோய் அவதியான
கடும்காய்ச்சல் நுரையீரல் அரிக்கும்
பீடைச்சளியை
போக்கிப் பிணிதீர்க்கப் போராடிப்
போராடித் தோற்றுப் புதிராய் விழித்தனரே!

(2)

அலோபதி மருத்துவர்கள் கவசவுடை
அணிந்துடல் முழுதும் மூடியவாறு
மக்களுக்கு ஓயாமல் பணிசெய்து
மண்ணுலக மக்களின் வேற்றுநோய்
எதற்கும் பெரிதானச் சிகிச்சைகள்
எதுவுமே செய்வதைத் தவிர்த்துக்
கொரோனாநோய்
மட்டுமே அரசக் கட்டளையென்று
மீட்டுயிர்க் காக்க மாயமா..... மருத்துவமே!
- சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை.


இறப்பும் ஈமச்சடங்கும்!
(உருமாறிய கொரோனா இரண்டாம் அலை - பாடல் 4)
(1)
கொரோனா நோயாளியர் ஒவ்வொருவரும்
கணக்கீடு செய்யப்பட்டு மருத்துவமனை
அவசரகால முகாம்கள் இல்லத்தனிமை
அடிப்படையில் கவனிக்கப்பட மக்கள்
அச்சப்பட்டு அச்சப்பட்டு நோய்க்கடிமை
அவரவராக வேலையிழந்துச் செல்வமிழந்து
கல்வியிழந்து
முன்னலை முதியோரைக் காவுவாங்க
இவ்வலை நடுவயதினரை துன்புறுத்திக் காவுவாங்கியதே!

(2)
எரியூட்ட இடமின்றிப் பிணக்கிடங்கில்
எண்ணற்றச் சடலங்கள் குவியலாக
இறந்தோர் ஈமச்சடங்கு எதுவுமின்றி
இடுகாடு மின்மயானம் புதைக்கும்
புதைகுழிகள் தவிரக் கங்கையாறு
என்றே புத்திக்கு எட்டியவகை
வீசிப்போக்க
ஆன்மவுயிர் வீட்டார்ப் புண்ணியமின்றி
ஆண்டவன் ஏற்பதாய் பாவமிகுக் காட்சியே!
சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை, 31.05.2021.

No comments:

Post a Comment