Tuesday, January 26, 2021

பன்னிரு இதழ்களிலும் என்கவிதை!

1. நிழற்தரும் மரங்கள் நம்மக்களே!

            (1)

பச்சைப் பசேலென வயல்கள்

பசுமை மரங்கள் படருங்கொடி

இலைகள் வண்ணப் பூக்கள்

இன்வாழைக் கீரைவளர்த் தென்னை

வுடையவூர் நடுவே தூண்கள்

வூன்றக்கோல் வீடுகள் வரவேற்க

வூராரும் வல்லுலகோரும் நல்வுறவாக

உன்னதக் குடும்பமாய் வாழ்ந்தனர் - நம்மக்களே!

            (2)

வளர்ந்த வளர்ச்சிக் கூறுகளால்

வளைந்த மரபுக் கூடுகள்

வளர்ந்தத் தேசம் பயணிக்க

வளரும் வளமை வலியாக

வறட்சி வறுமைச் சீராக

வசந்தக் கல்வி விதையாக

வரிந்தக் கணிணி மதியாலே

வுச்சப் பண்பாடு மாற்றத்தால் - நம்மக்களே!

            (3)

வரவேற்பா வாழ்த்தா மனமில்லை

வருவது வரட்டும் ஒளியில்லை

வுழைப்பு வுழைப்பு நேரமில்லை

வுண்ணா விரதம் நோன்பில்லை

வுயர்வுத் தாழ்வுப் பேதமில்லை

வுலகப் போக்குத் தெரியவில்லை

வரவும் செலவும் புரியவில்லை

வுண்மை நிழற்தரும் மரங்கள் - நம்மக்களே!

                      -சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா,

                                    கோவை. 

No comments:

Post a Comment