Tuesday, January 26, 2021

பன்னிரு இதழ்களிலும் என்கவிதை! (Episode - 4)

 

4. அவலநிலைக் காணீரோ!

            (1)

மக்கள் நடமாட்டம் ஆசைக்குறைய ஊரடங்குக்

காணீர் காணீர் காணீர்

இரண்டுச் சக்கர நான்குச் சக்கர

வாகனம் ரயில்கள் ஓடாமல்

மயான அமைதி நிலவவே

மக்கள் அச்சம் அச்சம்

உச்சமாய் விமானம் தடைச்செய

உள்ளூர் வெளியூர் செல்லாமற் தவித்தனரே!

 

            (2)

இல்லமோ வேலைச் செய்யிடமோ அங்கங்கு

இன்னலிற் தப்பித்து மேற்பிழைக்க

மாதம் கிழமைக் கடந்து

மாறா நிலைமை என்று மாறுமோ

என்றே அல்லல் அவதிகள்

எதுவும் பொறுத்துத் தொல்லை

தொல்லை தொலைவுத் தூரம்

தெரிந்துந் தெரியாமல் தள்ளாடி வாழ்ந்தே!

 

            (3)

வளர்ந்த நாடோ வளரும் நாடோ

வனப்பு வசந்தம் இழந்து

வைரஸ் கொரோனா

வாட்டப் பிரிவுத் துயரம்

இயலாமை தட்டுப்பாடு வேலை

இல்லாத் திண்டாட்டம்

பாரிரும் பஞ்சம் பட்டினி

பற்பலவுந் தாங்கி அவலநிலைக் கண்டே!

      -சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, 26.06.2020.

No comments:

Post a Comment