Tuesday, January 26, 2021

பன்னிரு இதழ்களிலும் என்கவிதை! (Episode - 3)

 

3. உலக மக்கள் நிலையிஃதே!

           (1)

 

முதன்முதல் தாக்கம் சீனதேசம் காண

முற்றிலாத் தொடரில் அமெரிக்கா ரஷ்யா

இத்தாலி ஸ்பெயின் ஆஸ்திரே லியாமேல்

இந்தியா சிங்கப்பூர் என்றே உலகெங்கும்

விந்தைத் தொற்று வைரஸ் கொரோனா

விடாமல் பரவித் தாக்கம் அச்சுறுத்த

மக்களைத் துன்பத்தில் தள்ளிப் பகுக்க

மரணப் பயத்தில் மனிதயினம் தத்தளித்தே!

 

            (2)

 

அச்சம் அச்சம் அச்சம் உச்சம்

அண்ட சராசரம் நடுங்க மக்கள்

அகமும் புறமும் தனித்து வாழ்ந்து

அக்கம் பக்கம் உறவுகள் துறந்து

அய்யகோ அய்யகோ அவலநிலை எங்கும்

அனைவர் உள்ளும் நினைத்த தொன்றே

அக்கரை இக்கரை வேற்றுமைக் கடந்து

அருளாய் இறைவா யாவர்க்கும் யென்றென்றே!

 

            (3)

 

முதியோர் இளையர்ப் பாகுபாடு இன்றியே

முற்றும் முடங்கி இல்லத்தில் வாழ

குடும்பச் சக்கரம் முக்கால யிக்கால

இல்லறத் தருமை விளங்க விடியல்

கண்டோர் கண்டனர் கண்டனர் காட்சி

கருத்திற் கொண்டனர் கொண்டனர் மாட்சி

தொற்று நோயால் மாண்டோர் பற்பலர்

தொற்றுக்கு மீண்டோர் மீண்டும் அச்சமடைந்தே!

            -அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை, 26.06.2020.

No comments:

Post a Comment