Tuesday, January 26, 2021

பன்னிரு இதழ்களிலும் என்கவிதை! (Episode - 2)

 

2. கலியுகக் காலனோ கொரோனா!

            (1)

சனவரி மாதம் இருபத்து மூன்றாம்நாள்

சீனதேசம் வூஹான் நகரம் அதிர்ச்சித்

தாக்கங் கண்டுப் பெருந்துயர்ச் செய்தியாக

தானே உணர்ந்து நடுங்கிச் சொன்னது

வௌவால் பறவை உணவோ அல்லதுபான்

கோலின் எறும்புத் தின்னியின் உணவோ

சோதனை அசைவ உணவுகள் உண்டதால்

சொக்கித் திணறி மடிந்தனர் மக்களென்றே!

 

            (2)

மனிதர் மனிதர்க்கு நோய்க்கிருமித் தொற்ற

மறைக்க இயலா நிலையில் மருத்துவம்

செய்தமா மருத்துவர்ப் பேச்சும் தோற்றுச்

செயல்கள் யாவும் வெளிவர மருத்துவர்

மகிமை அறியா தேசம் அவரின்

மதிப்புரை வீழ்த்தி மக்கள் முன்பே

முன்னிலை மருத்துவர் நோயில் மாண்டதாய்

முடக்கி இட்டனர் சவமிடும் பெட்டியிலே!

 

            (3)

மருத்துவர் இறப்பிலே மர்மச் செய்தியே

மக்கள் பீதிகொண்டுப் பற்பல திசையில்

பயணம் செல்லத் தாக்கம் மிகுந்துப்

பின்தொடர்த் தொற்று நோயால் இறப்பு

விகிதம் கூடின கூடின கூடின

விளக்கம் தேடிய உலகச் சுகாதார

மையம் கலியுகக் காலனைச் சுட்டியது

மக்களைத் தாக்கும் வைரஸ் கொரோனாவென்றே!

      -அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை. 25.06.2020.

No comments:

Post a Comment